தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக நோக்கி தொடரும் அமமுக தொண்டர்களின் பயணம் - அமமுக நிர்வாகிகள்

கரூர்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

vijayabaskar

By

Published : Sep 30, 2019, 3:20 PM IST

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட பிரதிநிதி குணசேகர், திருக்காம்புலியூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இன்று கரூர் அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

புதிய நிர்வாகிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் தோளில் துண்டு அணிவித்து வரவேற்றார். இதில் அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் கணேசன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details