கரூர்:அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் பொதுக்குழு கூடி இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றி பல்வேறு களேபரங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இரு தரப்பும் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி; கரூரில் ஆதரவாளர்கள் போஸ்டர் கரூரில் இபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக முக்கிய தலைவர்கள் சிலை அருகில் உள்ள கல்வெட்டில் ஓபிஎஸ் பெயர் மறைக்கப்படுள்ளது இந்நிலையில் கரூர் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கரூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.
கரூரில் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்ட்டர்கள் அதேபோல கரூர் நகர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் அதிமுகவின் முக்கிய மூன்று தலைவர்கள் சிலை அமைந்துள்ள இடத்தில் கல்வெட்டில் இருந்த ஓபிஎஸ் பெயர் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் திருச்சி சாலையில் அமராவதி ஆற்று பாலத்தில் ஒன்றரை கோடி தொண்டர்களின் பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பிரம்மாண்ட விளம்பர பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வாடிய ரோஜா மாலைகளுடன் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள்