கரூர் ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் பகுதியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கரூர் வடக்கு நகர செயலாளர் பாண்டியன் தலைமையேற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசுகையில், தமிழ்நாடு அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்கு விவசாயிகள் நல்ல வரவேற்பை அளித்துள்ளதாகவும் விரைவில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
கரூர் அதிமுகவின் கோட்டையாக மாறும் - எம்.ஆர். விஜயபாஸ்கர் மேலும், திமுக வாக்கு வங்கியைத் திரட்டுவதற்காக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களைத் துண்டிவிடுகிறது எனத் தெரிவித்த அவர், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்திலில், கரூர் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று கரூர் அதிமுகவின் கோட்டையாக மாறும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, நடிகர் வையாபுரி, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா மணிவண்ணன், முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:ஜெயலலிதா பிறந்த நாள் விழா - மாநிலம் முழுதும் அதிமுக சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்!