கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் பேசினார். இதற்கு அதிமுக, இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மீது வழக்குப்பதிவு - actor kamal
கரூர்: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மீது அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கை
இதைத்தொடர்ந்து, அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரவக்குறிச்சி இந்து அமைப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கமல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.