கரூர்:செல்லாண்டிபாளையம் அருகே உள்ள சுக்காலியூர் காந்திநகர் கரட்டுபாளையம் பகுதியில் குணசேகரன் என்பதற்குச் சொந்தமான புது வீடு கட்டடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கழிவறைத்தொட்டியில், கடந்த நவ.15ஆம் தேதி அமைக்கப்பட்ட கான்கிரீட் தளத்திற்கு கொடுக்கப்பட்ட பலகைகளை அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது உள்ளே இறங்கிய போது, இரண்டு மாதங்களாக மூடி வைத்திருந்ததால், விஷவாயு உள்ளே இருந்தது தெரியாமல் இறங்கியதால் அப்போதே மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதில், தான்தோன்றிமலையைச் சேர்ந்த மோகன்ராஜ்(23), தோரணக்கல்பட்டியைச் சேர்ந்த சிவா என்கிற ராஜேஸ் (38), கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சின்னமலைபட்டியைச்சேர்ந்த சிவகுமார் (38)ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில், உயிரிழந்த சிவகுமாரின் உறவினரான கோபால் என்பவரை காணவில்லை என அவரது மனைவி புகார் அளித்தார்.
அவர் அளித்தப் புகாரின் அடிப்படையில், சிவகுமாருடன் பணிக்கு வந்ததாக கூறப்படும் கோபால், அதே தொட்டியில் உயிரிழந்திருக்கக்கூடும் என காவல் துறையினர் சந்தேகத்தினர். அதனையடுத்து, அந்தத் தொட்டியில் சோதனை செய்து பார்த்ததில், தொட்டியில் அழுகிய நிலையில், சின்னமலைப்பட்டி ரங்கன் மகன் கோபால் (36), என்ற இளைஞரின் சடலம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினரால் மீட்கப்பட்டது.