தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூட்டிய வீட்டில் திருடிய சிறுவன் கைது! - கரூர் செய்திகள்

கரூர்: பூட்டிய வீட்டில் 600 ரூபாய் பணத்தை திருடிய சிறுவனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பூட்டிய வீட்டில் திருடிய சிறுவன் கைது
பூட்டிய வீட்டில் திருடிய சிறுவன் கைது

By

Published : May 9, 2020, 10:40 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி செல்ல மீரான் தெருவில் வசித்து வருபவர் சையது முகமது (17). இவர் ஷா நகர் பகுதியில் உள்ள முகமது இப்ராகிம் (36) வீட்டில், யாரும் இல்லாத நேரம் பார்த்து, டிவி அருகில் இருந்த மேஜையில் இருந்த 600 ரூபாயை திருடியுள்ளார்.

வீட்டை விட்டு வெளியே வந்த சையதை, அக்கம்பக்கத்தினர் பார்த்து இப்ராகிமுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சையதை விசாரிக்கையில், தான் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

உடனே அச்சிறுவனை, இப்ராகிம் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து காவல் துறையினர் அச்சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சையது தான் திருடியதை ஒப்புக் கொண்டாதால், இன்று குளித்தலை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு அவர் அஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அச்சிறுவனை சிறார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு - எம்எல்ஏ செந்தில் பாலாஜி ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details