தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

91 வயதிலும் வாக்களிக்க நேரில் வந்த மூதாட்டி... வியந்த ஆட்சியர் - மூதாட்டி

கரூர்: தள்ளாத வயதிலும் வாக்களிக்க நேரில் வந்த 91 வயது மூதாட்டிக்கு இருகரம் கூப்பி மாவட்ட ஆட்சியர் நன்றி தெரிவித்தார்.

karur
கரூர்

By

Published : Apr 6, 2021, 9:48 PM IST

கரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கமேடு எக்குவடாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரசாந்த் மு வடநேரே வாக்குப்பதிவு நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, வாக்குச்சாவடிக்கு எஸ்.பி.காலனியைச் சேர்ந்த ஞானாம்பாள் என்ற 91 வயதான மூதாட்டி, சக்கர நாற்காலியில் வாக்களிக்க வந்ததை கண்டு வியப்படைந்தார். உடனடியாக, மூதாட்டியிடம் சென்ற அவர், இந்த வயதிலும் வாக்களிக்க ஆர்வமுடன் வருகை தந்து இருக்கின்றீர்களே உங்களுக்கு என்ன வயது ஆகிறது" என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த மூதாட்டி, எனக்கு 91 வயது ஆகிறது ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் நேரில் வந்து வாக்களித்து விடுவேன். எப்போதும் நடந்து வந்து வாக்களிப்பேன். இந்த முறை நடக்க இயலாததால் சக்கர நாற்காலியில் என்னை அழைத்து வந்துள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

91 வயதிலும் வாக்களிக்க நேரில் வந்த மூதாட்டி

அப்போது மூதாட்டியுடன் வந்தவர்கள், தேர்தலில் வாக்களிப்பதை வழக்கமாக வைத்துள்ளதால், இந்தாண்டும் எப்படியாவது நேரில் செல்ல வேண்டும் என வற்புறுத்தினார் எனத் தெரிவித்தனர்.

மூதாட்டியின் கதையைக் கேட்டு நெகிழ்ந்த ஆட்சியர், "அனைத்து வாக்காளர்களுக்கும் நீங்கள் ஒரு முன் உதாரணமாக திகழ்கின்றீர்கள். இந்தத் தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்ற ஆர்வமுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க நேரில் வந்தமைக்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் தேர்தல் ஆணையத்தின் சார்பிலும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்துப் பாராட்டினார்.

இதையும் படிங்க:பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்த கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details