தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எப்படி நீ எங்க நடைபாதையில் வரலாம்' - பெண்ணின் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய 4 பேர்! - Four people assassinate woman against ruthlessness in Aravakurichi

கரூர்: அரவக்குறிச்சியில் இரக்கமின்றி பெண்ணின் மீது நான்கு பேர் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரூர்
கரூர்

By

Published : Feb 20, 2020, 11:10 AM IST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த வேலாயுதம்பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வி. இவர் கணவரை இழந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமாருக்கும் செல்விக்கும் இடையே நடைபாதை தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று செல்வி தனது மகனுடன் அந்த பிரச்னைக்குரிய நடைபாதையில் சென்றார். அப்போது, இதைப் பார்த்த விஜயகுமார், தனது அண்ணன் ரவிச்சந்திரன் மற்றும் மனைவியுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, செல்வி மற்றும் அவரது மகனின் மீது, நான்கு பேரும் சேர்ந்து கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டனர்.

பெண்ணின் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்திய 4 பேர்

இந்தத் தகராறில் செல்வியின் மண்டை உடைக்கப்பட்டு படுகாயங்களுடன் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரைக் கைது செய்தனர். மேலும், மூவரும் தப்பியோடிவிட்டதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க:அவினாசி கோர விபத்து: 16 பேர் உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details