கரூர் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 3) மூன்று நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. கரூர் வடிவேல் நகர் பகுதியில் 37 வயது ஆண், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 63 வயது ஆண், பெங்களூருவில் இருந்து வந்த கரூரைச் சேர்ந்த 40 வயது ஆண் ஆகிய மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனாவிலிருந்து ஒரே நாளில் 11 பேர் குணம் - கரூர் மாவட்ட செய்திகள்
கரூர்: கரூரில் மூன்று குழந்தைகள் உள்பட 11 நபர்கள் கரோனா வைரஸ் சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பினர்.
கரூர் அரசு மருத்துவமனை
இதன் மூலம் கரூரில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் 153ஆக உயர்ந்துள்ளது. மேலும், கரூரில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்பட 11 நபர்கள் கரோனா வைரஸ் சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பியுள்ளனர். இதில் ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள், மூன்று குழந்தைகள் ஆவர்.
இதையும் படிங்க: காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய இளம்பெண் சடலம்!