கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அடுத்துள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் ஏஞ்சல் (21). இவர் நேற்று இரவு வழக்கம் போல் தனது படுக்கையறைக்கு சென்று தூங்கியுள்ளார். இன்று காலை முதல் அவரை காணவில்லை. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் ஏஞ்சலை பல இடங்களில் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் ஏஞ்சலின் தாயார் ஜெயபதி தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஏஞ்சல் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (24) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனவே ஏஞ்சல் தனது காதலன் அரவிந்துடன் சென்றிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் இருவரையும் தேடி வருகின்றனர்.