தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - யாதவ மகா சபை தலைவர்

தமிழ்நாடு அரசில் யாதவர் சமூகத்திற்கு இரண்டு அமைச்சர்கள் வாய்ப்பு தந்தாலும்; எங்கள் சமுதாயத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை என்றும்; எங்கள் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும், கால்நடை வளர்ப்பு வாரியம் அமைத்துத் தரவேண்டும் எனவும் தமிழ்நாடு யாதவ மகா சபை மாநிலத்தலைவர் ராமச்சந்திரன் யாதவ் கூறினார்.

யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

By

Published : Oct 16, 2022, 8:15 PM IST

குமரி: தமிழ்நாடு யாதவ மகா சபை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது. இவ்வமைப்பின் குமரி மாவட்டத் தலைவர் பெருமாள் மற்றும் மாவட்டச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து யாதவர் சமுதாய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு யாதவ மகா சபையின் மாநிலத்தலைவர் ராமச்சந்திரன் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தமிழ்நாடு அரசில் யாதவர் சமூகத்திற்கு இரண்டு அமைச்சர்கள் வாய்ப்பு தந்தாலும் எங்கள் சமுதாயத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கவில்லை.

யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - யாதவ மகா சபை தலைவர்

மேலும் எங்கள் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கால்நடை வளர்ப்பு வாரியம் அமைத்துத் தரவேண்டும். கோயில் அறங்காவலர் குழு உள்ளிட்ட அனைத்து வாரியங்களிலும் எங்கள் சமுதாயத்திற்கும் பங்களிப்புத்தரவேண்டும். எங்கள் சமுதாயத்திற்கு எல்லா கட்சிகளிலும் அதிகமான வேட்பாளர் வாய்ப்புகள் வழங்க கோரிக்கை வைத்துள்ளோம்’ என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details