உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவின்9 வது மாநாடு இன்று நாகர்கோவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு காரணமானகுற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்,தமிழக அரசு குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கதோடு செயல்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி சம்பவத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை - தமிழக அரசு பாதுகாப்பு
கன்னியாகுமரி: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நாகர்கோவிலில் நடைபெற்ற உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி
பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்களை அரசாணையில் வெளியிட்டு அவர்களை தமிழக அரசு நேரடியாகவே மிரட்டி வருகிறது. எனவே தமிழக அரசும் காவல்துறையாலும்இந்த வழக்கை நேர்மையாக நடத்த முடியாது. எனவே ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணைநடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், குற்றவாளிகளை மறைப்பதோடு குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக அரசுக்கும் காவல் துறைக்கும்கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.