கன்னியாகுமரி மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கு தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வழங்கி உள்ளன. இந்தக் கடனை தற்போதைய கரோனா பாதிப்பு சூழ்நிலையில் பொதுமக்கள் வேலை இல்லாததால் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் கொடுத்த கடனை திருப்பிக் கட்ட வேண்டும் என்று தனியார் நிறுவனங்கள் அவர்களை கெடுபிடி செய்து வருகிறார்கள். இதனால் கடன் வாங்கிய பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவுள்ளதாகவும், இரவு நேரங்களில் போன் செய்து அவர்களை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பெண்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை24) தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், தனியார் நிறுவனங்களிடம் வாங்கிய கடனை உடனடியாக திருப்பி செலுத்த வலியுறுத்தி கெடுபிடி செய்வதுடன், மிரட்டி வருவதாகவும், பணத்தை கட்டுவதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: இந்தியாவில் 1.5 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனை!