கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கரிய மாணிக்கபுரம் பகுதியில் சில தினங்களுக்கு முன் வள்ளியூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரெசி என்ற ரஜினிகுமார் (33) எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதில் முக்கியக் குற்றவாளியாக அவரது நண்பர் கேதீஸ்வரன், பழனி, முகமது ஃபைசல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் உடல் எரிந்த காதலனின் புகைப்படத்தை பார்த்த கன்னியாகுமரி பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் அனுஷா(27) அதிர்ச்சியுற்று நேற்று (மே 8) காலை வீட்டில் தனிமையில் இருக்கும்பொழுது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.