தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசாரிப்பள்ளம், பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்த மினிலாரி ஓட்டுநர் கைது - செவிலியர்கள் உடை மாற்றுவதை மறைந்திருந்து படம்பிடித்த நபர்

கன்னியாகுமரி:  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் உடை மாற்றுவதை மறைந்திருந்து படம்பிடித்த மினி லாரி ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

woman-filmed-in-dress-changing-room
woman-filmed-in-dress-changing-room

By

Published : Feb 10, 2020, 8:01 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிமுடிந்து செவிலியர்கள் துணி மாற்றுவதை இளைஞர் ஒருவர் இருட்டில் மறைந்திருந்து படம்பிடித்து கொண்டிருந்ததை பார்த்து அரசு பணியாளர்கள் கண்டித்தனர்.

இதையடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடி மருத்துவக் கல்லூரிக்கு வெளியே வந்தார். அப்போது, அவரை மருத்துவமனையிலிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கன்னியாகுமரி அருகே உள்ள மந்தாரம்புதூர் பகுதியை சேர்ந்த பிராவின் (30) என்பது தெரியவந்தது.

அப்பகுதியில் மினி லாரி ஓட்டுநராக இருக்கும் பிராவின், பலமுறை இதேபோன்று மறைந்திருந்து செவிலியர்கள் உடைமாற்றுவதை படம்பிடித்துள்ளார் என்பது தெரியவந்தது.

பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்த நபர் - காவல்துறையிடம் ஒப்படைப்பு

அவரது செல்போனில் பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்ததும் தெரியவந்தது. பிராவின் மீது காவலர்கள் வழக்குபதிவு செய்து அவனது செல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சிறுமி பாலியல் தொழில் வழக்கு - தேடப்பட்டுவந்த பெண் கைது

ABOUT THE AUTHOR

...view details