தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்!

கன்னியாகுமரி: பேச்சிப்பாறை அணையிலிருந்து குற்றியாறு மலைக் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

water-lever-reached-upto-ground-bridge-in-kanniyakumari

By

Published : Nov 2, 2019, 12:00 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே பேச்சிப்பாறையிலிருந்து குற்றியாறு மோதிர மலைக்குச் செல்லும் சாலையில் காட்டாற்று வெள்ளம் தரைமட்டத்தை மூழ்கும் அளவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதி வழியாகச் செல்லும் வாகனங்கள் தரைப்பாலத்தில் ஆபத்தான நிலையில் பயணம்செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்

மோதிரமலை, குற்றியாறு, கோதையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவிகள், பொதுமக்களை நகரப் பகுதிகளுக்கு இணைக்கும் இந்தச் சாலையில் ஒரு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். ஆனால் இந்தக் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; சிறுவர்கள் குளிப்பதைத் தடுக்க மக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details