கனமழையால் கூலித் தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது - கனமழையால் வீடு இடிந்து விழுந்தது
கன்னியாகுமரி: கனமழை காரணமாக கூலித் தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கோட்டாறு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். கூலித் தொழிலாளியான இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 4) இரவு கணேஷ் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பெய்த கனமழையால், அவரது வீடு திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது.
இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் குறித்து கோட்டாறு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.