அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவு படி, தமிழ்நாடு முழுவதும் அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலாவின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் நாகர்கோவிலில் கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயலாளர் செந்தில் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
சசிகலா பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய அமமுகவினர் அதைத் தொடர்ந்து கிழக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பாக நாகர்கோவில் பகுதியிலுள்ள ஏராளமான ஆதரவற்றோர்களுக்கு உணவுகள் வழங்கினார்கள். மேலும், பார்வதிபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கேக் வெட்டி அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடினர்.
இதையும் படிங்க:பேரறிவாளன் பரோல் மனு ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டு விட்டது - சிறைத்துறை