தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசின் விதிமுறைகளை மீறிய 246 பேருக்கு அபராதம்: குமரி ஆட்சியர் - கன்னியாகுமரியில் அரசின் விதிமுறைகள் மீறல்

கன்னியாகுமரி: அரசின் விதிமுறைகளை மீறியதாக குமரி மாவட்டத்தில் நேற்று (அக். 21) 246 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் வடநேரே
பிரசாந்த் வடநேரே

By

Published : Oct 22, 2020, 12:22 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று தகுந்த இடைவெளியை கடைபிடிக்கத் தவறிய மற்றும் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்தவர்கள் என மொத்தம் 246 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் 51 ஆயிரத்து 600 ரூபாய் வசூலானது.

குமரியில் இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 118 நபருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் 376 பேர் கோவிட் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 707 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details