தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு நிமிட பேச்சு.. விஜய் வசந்த் கோரிக்கை ஏற்பு.. நாகர்கோவில் மக்களுக்கு வரப்பிரசாத திட்டம்! - Vijay Vasanth

நாகர்கோவிலில் உள்ள சித்தா மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரி்வு அமைக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட எம்.பி., விஜய் வசந்த் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

Vijay Vasanth
Vijay Vasanth

By

Published : Apr 1, 2022, 7:35 PM IST

புது டெல்லி : கடந்த பிப்.1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் வரவு-செலவு திட்ட அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்தார். காகிதமில்லாத பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட்ட இந்தப் பட்ஜெட்டின் தகவல்கள் Union Budget App-இல் உடனுக்குடன் வெளியாகின.

இந்தப் பட்ஜெட் மீதான விவாதம் இரு அமர்வுகளாக நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்.1) கன்னியாகுமரி எம்.பி., விஜய் வசந்த் மக்களவையில் பேசினார். அப்போது, “நாகர்கோவில் சித்தா மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சை பிரிவு மற்றும் குமரி மாவட்டத்தில் சித்தா மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்றை அமைக்க வேண்டும்” எனவும் கோரிக்கை வைத்தார்.

ஒரு நிமிட பேச்சு.. விஜய் வசந்த் கோரிக்கை ஏற்பு.. நாகர்கோவில் மக்களுக்கு வரப்பிரசாத திட்டம்!

இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால் கூறினார். எம்.பி. விஜய் வசந்தின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “நாட்டில் ஆயுர்வேத மருத்துவம் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. நாகர்கோவிலில் புற்றுநோயிக்கு தனிச் சிகிச்சை பிரிவு அமைக்க பரிசீலிக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க : தமிழில் பதவியேற்ற விஜய் வசந்த்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details