நடிகர் விஜய் திரையுலகிற்கு வந்து 28ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அதனை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
பெண்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த கால்பந்தாட்ட போட்டியில் தோவாளை, ஆரல்வாய்மொழி, அருமனை உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கால்பந்தாட்ட அணிகள் கலந்துகொண்டன.