தமிழ்நாடு முழுவதும் கடந்த பத்து தினங்களாக கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் பயிர்கள், காய்கறிகள் சேதமடைந்து வரத்து குறைந்தது. இதனால் குமரி சந்தையில் காய்கறியின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
குமரி காய்கறிச் சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட வெள்ளரிக்காய் ரூ. 70ஆகவும், காலி ஃப்ளவர் ரூ.20லிருந்து ரூ.60 ஆகவும், காரட், பீன்ஸ் ரூ.40லிருந்து ரூ.70 ஆகவும், வெள்ளைப்பூண்டு கிலோ ரூ. 180லிருந்து கடுமையாக உயர்ந்து ரூ.260க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் பல்லாரி, சின்ன வெங்காயம் விலையும் ரூ. 100 ரூபாயை நெருங்கி வருகிறது.
10 நாட்களுக்கு முன்பாக கிலோ ரூ.25க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது ரூ. 90க்கும், பெரிய வெங்காயம் ரூ. 95க்கும் விற்கப்படுகிறது. வெள்ளரிக்காய் ரூ. 20லிருந்து ரூ. 70க்கும், வெண்டைக்காய் ரூ. 15லிருந்து ரூ. 60க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ. 40லிருந்து ரூ. 110க்கும் விற்கப்படுகிறது.
காய்கறிகளின் விலை மூன்று மடங்கு உயர்வு குமரி காய்கறிச் சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தொடர்ந்து இந்த வாரத்தில் முகூர்த்த நாட்கள், சபரிமலை சீசன் ஆகியவை வரவுள்ளதால் காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்தே இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல்!