தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருக்க கூடாது' - ஜி.ராமகிருஷ்ணன்

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருக்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருக்க கூடாது
மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருக்க கூடாது

By

Published : Jul 10, 2021, 4:49 PM IST

கன்னியாகுமரி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வரும் 12ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், நாகர்கோவிலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று (ஜூலை.10) கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு வந்தார்.

ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது

ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டு அதில் (டிபிஆர் அனுமதி) விரிவான திட்ட அறிக்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இது தவறானது, இவ்வாறு அனுமதி அளித்திருக்க கூடாது.

எப்போது காவிரி ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறதோ அதிலிருந்து தமிழ்நாடு, கர்நாடகா சம்மந்தப்பட்ட மாநிலங்கள் அந்த ஆணையத்தோட அனுமதி இல்லாமல் இப்படி ஒரு அணை கட்டுவது என்பது ஏற்றுகொள்ள முடியாது. ஒன்றிய அரசு அனுமதி அளித்தது சரியில்லை.

மேகதாதுவில் அணையை கட்ட ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும் என நாளை மறுநாள் (ஜூலை.12) தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வலியுறுத்து உள்ளோம்" என அவர் கூறினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு முழு விவரம்!

ABOUT THE AUTHOR

...view details