கரோனா நோய்ப் பாதிப்பைத் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஏழை மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை திமுக சார்பில் செய்ய வேண்டும் என தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதே போன்று இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஏழை மக்களுக்கு உதவுங்கள் எனத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொறுப்பாளர் பிரபா ராமகிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில், மறவன் குடியிருப்புப் பகுதியில் தொழில் இல்லாமல் தவிக்கும் ஆட்டோ ஓட்டும் தொழிலை மட்டுமே நம்பி வாழும் 200க்கும் மேற்பட்ட ஏழை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.