கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் , ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தொற்றுநோய் சிகிச்சைக்கான கரோனா வார்டில் 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சமய மாநாட்டில் பங்கேற்று திரும்பிய குமரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் உள்பட ஆறு பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் இரண்டு இளைஞர்கள் இன்று கரோனா தொற்று வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.