கன்னியாகுமரி மாவட்டம் குன்னம்பாறை பகுதியை சேர்ந்தவர் விஜின் (30). கூலி வேலைசெய்து வந்த இவர், நேற்று (ஜூன்.16) மாலை தனது இருசக்கர வாகனத்தில், வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அழகியமண்டபம் - மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை புலிப்பனம் ஜங்கசன் அருகே சென்ற போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில் விஜின் சுமார் பத்தடி தூரத்திற்கு வீசியெறியப்பட்டு படுகாயம் அடைந்தார்.
இருசக்கர வாகனம் விபத்து சிசிடிவி காட்சி இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் விஜினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சைப்பெற்று வந்த விஜின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தக்கலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: முருங்கைக்காய் பறிக்கச் சென்ற இளம்பெண் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு