தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு குறித்த இருசக்கர வாகனப் பரப்புரை தொடக்கம் - Kanniyakumari to Chennai

கரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பரப்புரை இன்று (டிசம்பர் 11) கன்னியாகுமரியில் தொடங்கியது.

இருசக்கர வாகனப் பரப்புரை
இருசக்கர வாகனப் பரப்புரை

By

Published : Dec 11, 2020, 7:22 PM IST

கரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட பொதுமக்களுக்கு பாடல்கள் மூலம் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பழனியாப்பிள்ளை, கண்டன்விளை ராஜேந்திரன் ஆகிய இருவர் இணைந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் காந்தி மண்டபத்திலிருந்து தொடங்கிய இந்த பரப்புரை பயணத்தை அம்மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் நெல்சன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பயணம் திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக சென்று சென்னையில் முடிவடையும்.

கரோனா விழிப்புணர்வு குறித்த இருசக்கர வாகனப் பரப்புரை

வழிநெடுகிலும் சிறுவர் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விழிப்புணர்வு பெறும் வகையில், முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை முறையாக கழுவ வேண்டும், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் போன்றவற்றை பாடல்களாக பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.

இதையும் படிங்க:கரோனாவால் உயிரிழந்த பிரபல இயக்குநர் - ரசிகர்கள் அதிர்ச்சி

ABOUT THE AUTHOR

...view details