குமரி மாவட்டம் நாகர்கோவிலின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து போதை ஊசி மருந்து விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது குறித்து காவல்துறையினர் பேருந்துநிலையம், மீனாட்சிபுரம், செட்டிக்குளம், ராமன்புதூர் பகுதிகளில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இளைஞர்களை குறிவைக்கும் போதை ஊசி மருந்து விற்பனை! - கன்னியாகுமரி
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் இளைஞர்களை குறிவைத்து போதை ஊசி மருந்து விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகர்கோவில் என்.ஜி.ஓ காலனி அருகே காவல்துறையினர் ரோந்து சென்றபோது அங்கு இரண்டு இளைஞர்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து அவர்களது உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் 15 போதை ஊசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து போதை ஊசி மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். அதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கைதானவர்களின் பெயர் சேகர் (42), இரோன்ராஜா (33) என்பது தெரியவந்தது. இவர்களில் சேகர் ஏற்கனவே போதை மருந்து விற்பனை செய்த வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.