கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பார்வதிபுரம் நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களில், உதவி கேட்பதை போன்று நடித்து, அவர்களிடமிருந்து நகை உள்ளிட்டவற்றை திருடிச் செல்லும் செயல் அதிகரித்து வருகிறது.
உதவி கேட்பது போல் நடித்து நகை பறிப்பு - இரண்டு பேர் அதிரடி கைது! - வழிப்பறி
கன்னியாகுமரி: உதவி கேட்பது போல் நடித்து நகை பறிக்க முயன்ற இரண்டு இளைஞர்களை வாகன ஒட்டுநர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே நெல்லை மாவட்ட மாஜிஸ்திரேட் ஒருவரின் கார் ஓட்டுநர், வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு காரை நிறுத்தி உதவி கேட்பது போல் காரை நிறுத்திய இளைஞர்கள், அவரின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து விட்டு தப்பி ஓட முயன்றனர்.
இதில் ஒட்டுநர் உடனடியாக இரண்டு இளைஞர்களைப் பிடித்து வடசேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வழிப்பறிக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், தப்பி ஓடிய நான்கு இளைஞர்களைத் தேடி வருகின்றனர்.