கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம், நாவல்காடு பகுதியில் மக்களின் வசதிக்காக SBI வங்கி ஏடிஎம், ஃபெடரல் வங்கியின் ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கம்போல் இன்று காலை பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் வந்தபோது இரண்டு ஏடிஎம் அறைகளின் கண்ணாடிகள் செங்கல்கள், கற்களை கொண்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் உடைப்பு - கொள்ளை முயற்சியா??? - strange people
கன்னியாகுமரி: இறச்சகுளம், நாவல்காடு பகுதியில் அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் அறைகளின் கண்ணாடிகளை செங்கல்கள், கற்களை கொண்டு அடையாளம் தெரியாத நபர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பூதப்பாண்டி காவல் துறையினர் ஏடிஎம் அறைகளை ஆய்வு செய்தனர். பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே நாளில் இரண்டு ஏடிஎம்களின் கண்ணாடிகள் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டிருப்பது பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே பகுதிகளில் இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ திருடப்பட்டுள்ளது. இப்பகுதியில், அடுத்தடுத்து நடைபெற்றுவரும் குற்ற சம்பங்களால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும், ஏடிஎம்களில் காவலாளிகள் இல்லாததால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே உடனடியாக காவலாளிகளை நியமிக்க வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்களும், பொது மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.