தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் நின்ற லாரியில் திடீர் தீ! - கன்னியாகுமரியில் திடீரென தீப்பிடித்த லாரி

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் நின்ற லாரியில் திடீர் தீ
சாலையில் நின்ற லாரியில் திடீர் தீ

By

Published : Jan 22, 2020, 2:17 PM IST

குமரி மாவட்டம், நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்ட டிப்பர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. லாரிகளை அப்பகுதி சாலை ஓரமாக ஓட்டுநர்கள் நிறுத்திவிட்டு காலைக் கடன்களை கழிப்பதும், உணவு அருந்தச் செல்வதும் வழக்கமான ஒன்று. அந்த வகையில் இன்று காலை டிப்பர் லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு, ஓட்டுநர் சென்ற நேரத்தில் எதிர்பார்க்காத விதமாக அந்த லாரி தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.

காற்று அதிகமாக வீசியதால் தீ வேகமாக லாரியின் முன் பக்கம் முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எதிரே பெட்ரோல் பங்க் இருப்பதால் தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர். இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி

ABOUT THE AUTHOR

...view details