உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கடந்த சில தினங்களுக்கு முன்பு மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்திலிருந்து கன்னியாகுமரியில் இஸ்லாமியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதுபோல் அவர்கள் அதிகாலையிலேயே கன்னியாகுமரிக்கு வந்து அதனை சுற்றியுள்ள சுற்றுலாப் பகுதிகளை கண்டுகளித்து வருகின்றனர்.
ரம்ஜான் விடுமுறை, குமரியில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்!
கன்னியாகுமரி: ரம்ஜான் விடுமுறையைத் தொடர்ந்து வந்த வார விடுமுறையையடுத்து குமரியில் இஸ்லாமிய சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
அதனை தொடர்ந்து, அவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று காண்கிறார்கள்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணி ஒருவர், கன்னியாகுமரியை மிகவும் ரசித்ததாகவும், இந்தப் பகுதி மிகவும் அழகாக இருப்பதாகவும் கூறினார். ஆனால் இங்கு சுகாதாரப் பணிகள் சரியாகசெய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் விரும்பும் சுற்றுலாப் பகுதியான கன்னியாகுமரியை சுகாதாரமாக வைக்க, இங்கு கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்.