இலங்கையில் கடந்த ஞாயிற்று கிழமை எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. அதுமட்டுமின்றி இன்றும் ஒரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே அந்நாட்டில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் காரணமாக இலங்கையின் அருகாமையில் உள்ள பல்வேறு நாடுகளில் கடலோரக் காவல் படையினர் மற்றும் கப்பல் படையினர் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: கன்னியாகுமரியில் சோதனை - sri lanka
கன்னியாகுமரி: இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் கடலோரக் காவல் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 48 கடற்கரைக் கிராமங்களில் உள்ள சின்னமுட்டம், குளச்சல் உள்ளிட்ட 11 சோதனை சாவடிகள் வழியே செல்லும் வாகனங்களைக் கண்காணித்து வரும் கடலோரக் காவல் படையினர், சுற்றுலாப் பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 72 கி.மீ. தூரம் கொண்ட ஆழ் கடல் பகுதிகளிலும் படகுகள் மூலம் சென்று கடலோர காவல் படையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.