தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

49 ஆண்டுகளை நிறைவு செய்த விவேகானந்தர் பாறையின் நினைவுச் சின்னம்! - 49 ஆண்டுகள் நிறைவு பெற்ற விவேகானந்தர் பாறையின் நினைவு சின்னம்

கன்னியாகுமரி : கடல் நடுவே அமையப்பெற்றுள்ள விவேகானந்தர் பாறையின் நினைவு சின்னம் நேற்றுடன் 49 ஆண்டுகள் நிறைவுப்பெற்று 50 ஆண்டு தொடக்க விழாவானது டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

-rockmemoriyal-ponvilaa

By

Published : Sep 3, 2019, 11:49 PM IST

விவேகானந்தர் பாறையின் நினைவு சின்னம் அமைக்கப்பட்டு நேற்றுடன் 49 ஆண்டுகள் நிறைவுப்பெற்று, 50ஆம் ஆண்டு தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து டெல்லியில் குடியரசுத் தலைவர் அவரது மாளிகையில் சிறப்பாக கொண்டாடினர். இதன் நினைவைப் போற்றும் வகையில் 'ஒரே பாரதம் வெற்றி பாரதம்' என்ற நிகழ்வு கடந்த திங்கட்கிழமை முதல் பாரத நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறை மீது சுவாமி விவேகானந்தர் 1892ஆம் ஆண்டு டிசம்பர் 25 , 26 , 27 தேதிகளில் தியானம் புரிந்தார் . பாரத நாட்டின் கடைசிப் பாறை மீது அமர்ந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையின் மகத்தான தீர்மானத்தை அங்கே அவர் எடுத்துக்கொண்டார் .

49 ஆண்டுகள் நிறைவு பெற்ற விவேகானந்தர் பாறையில் நினைவுச் சின்னம்

மேலும், பாரதத்தின் புராதனப் பெருமைகளைத் திரும்பக் கொண்டு வர, தன் வாழ்நாள் முழுவதும் உழைப்பது என்று அவர் முடிவு செய்தார். அதன் பிறகு 1963இல் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவின் போது, அவர் முன்பு தியானம் செய்த பாறை மீது பிரமாண்ட நினைவுச் சின்னம் எழுப்புவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நினைவுச் சின்னம் இப்போழுது 50 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறது. இந்நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு முதல் பார்வையாளராக வந்த மும்பையைச் சேர்ந்த டாக்டர். நவநீத மேக்னனியின் குடும்பத்தாருக்கு விவேகானந்தர் பாறை பொறுப்பாளர் அபினாஷ் பாட்டாரே நினைவுப் பரிசு வழங்கினார்.மேலும் விவேகானந்தர் பாறையின் நினைவுச் சின்னத்தை பார்க்க நேற்று மாலை வரையிலும் 6,52,74,384 நபர்கள் பார்வையாளராக வந்து கண்டுகளித்துள்ளனர்.

விவேகானந்தர் பாறையின் நினைவு சின்னத்தை பார்க்க நேற்று மாலை வரையிலும் 6,52,74,384 நபர்கள் பார்வையாளராக வந்து கண்டுகளித்துள்ளனர்

மேலும்,1964 முதல் 1970 வரை கட்டப்பட்ட காலத்தில் அனைத்து மாநில அரசுகளும், அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களும் வேறுபாடு கருதாமல் லட்சம் ரூபாய் கொடுத்து நினைவுச் சின்னம் கட்ட உதவினர். மேலும், மத்திய அரசும் இதற்கு 15 லட்சம் ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details