தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம் 117வது பிறந்த நாள்.. அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை! - பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்

பொதுவுடமை சிற்பி ஜீவானந்தம் 117வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் ஆட்சியர் ஸ்ரீதர், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பொதுவுடமை சிற்பியின் 117வது பிறந்த நாள் மரியாதை நிகழ்வு
பொதுவுடமை சிற்பியின் 117வது பிறந்த நாள் மரியாதை நிகழ்வு

By

Published : Aug 21, 2023, 1:57 PM IST

பொதுவுடமை சிற்பியின் 117வது பிறந்த நாள் மரியாதை நிகழ்வு

கன்னியாகுமரி:பொதுவுடமை சிற்பி என்றும் தோழர் என்றும் அழைக்கப்படும் ஜீவா என்கின்ற ஜீவானந்தம் அவர்கள் 1907ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தார். இவருக்கு இவரது பெற்றோர் சொரிமுத்து என பெயர் வைத்தனர். குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக பிறந்த இவர் கல்வியில் சிறந்த மாணவராக விளங்கினார்.

சிறு வயதிலேயே கவிபாடும் திறனை வளர்த்துக் கொண்ட இவர் பிற்காலத்தில் இலக்கியத்திலும், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பொதுப் பணியில் நாட்டம் அதிகம் இருந்தால் தனது சொந்த ஊரான பூதப்பாண்டியில் சங்கம் அமைத்து பணிகளைச் செய்து வந்தார்.

தீண்டாமை எதிர்ப்பை வெளிப்படுத்திய இவர், தாழ்த்தப்பட்ட சாதியினருடன் பழகுவதை விருப்பமாக கொண்டிருந்தார். இவ்வாறு அவர் பழகியதால் ஊரில் உள்ளவர்களுக்கு அவரை பிடிக்காமல் போகவே, அங்கிருந்த வீட்டை விட்டு வெளியேறினார். உலகில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு துணையாக ஜீவானந்தம் திகழ்ந்தார்.

பெரியாரோடு இணைந்து வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்து கொண்ட அவர், 1955ம் ஆண்டு தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஆனார். அவருடைய வாழ்க்கை நெடுகிலும் போராட்டம், சிறைவாசம் நிறைந்ததாக அமைத்தது.

தொழிலாளர் பிரச்சினை எங்கு நடைபெற்றாலும் அங்கு அவர் இருப்பார். இதனால் இவர் தனது வாழ்நாளில் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தார். அங்கும் சிறை கைதிகளின் கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தார்.
இவர் தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளப்படுத்தி கொள்வதை விட, தொழிலாளர் தலைவராக அடையாளப்படுத்தி கொள்வதையே விரும்பினார்.

அவர், "என் வாழ்நாள் முழுவதும் இந்த பாட்டாளி மக்களுக்காக உழைத்தேன். என் இறுதி காலமும் அத்தகைய மன நிலையிலேயே கழிய வேண்டும். அவர்களிடமிருந்து என்னை தனித்துக் காட்டும் எந்த விஷயமும் எனக்கு தேவை இல்லை" எனக் கூறி வாழ்ந்து வந்தார். நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த இவர், சென்னை வண்ணார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு 1952ல் சட்ட மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

வாழ்நாள் முழுவதும் தொழிளாலர்களுகாக வாழ்த்தவர், உடல் நலம் குன்றிய நிலையில் 1963ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி மரணித்தார். இதனையடுத்து, அவரது புகழை பரப்பும் நோக்கில் மத்திய அரசு, அவர் படம் பதித்த தபால் தலையை வெளியிட்டு கௌரவித்தது. மேலும், அவரது நினைவாக தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அவருக்காக மணிமண்டபமும் அமைத்தது.

மேலும், ஆண்டுதோறும் அரசு சார்பாக அவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில், ஜீவானந்தம் அவரின் 117வது பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட். 21), நாகர்கோவிலில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அவரின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாள்களை சந்தித்து கூறுகையில், "ஆளுநரும், பாஜகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஆளுநர் அவரது எல்லையை புரிந்து கொள்ள வேண்டும். பாஜக-வை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அது ஆட்கள் இல்லாத கட்சி, கதைக்கு ஆகாத கட்சி. நடை பயணம் என்று சொல்லி அதை கூட ஒழுங்காக நடக்க முடியாத கட்சி. அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை.

புதிது புதிதாக நிறைய பேர் பெயர் வைத்து கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி என்ன புரட்சி செய்தார் என்று சொன்னால் அதைப் பற்றிக் கேட்கலாம். எத்தனையோ சட்டங்கள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு அவை மக்களுக்கு உகந்ததாக இல்லை என்பதால் அதை திரும்ப பெற்ற வரலாறு உள்ளது.

காங்கிரஸ் நீட் அறிமுகப்படுத்தி இருக்கலாம். அதை பாஜக நிறைவேற்றி இருக்கலாம். நீட் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் என்னவென்று தெரியாது. ஆனால் நிறைவேற்றப்பட்டிருப்பதன் நோக்கத்தின் விதம் மக்களை பாதிக்கிறது" எனக் கூறினார்.

இதையும் படிங்க:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பதறிப்போன பயணிகள்.. என்ன நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details