குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் சமீப காலமாக கைப்பேசி அழைப்புகள், முகநூல், வாட்ஸ் ஆப் போன்றவற்றின் மூலம் முன்பின் தெரியாதவர்களை, இளம்பெண்கள் நம்பி ஏமாறுவது வேதனையளிக்கிறது. மேலும், இவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவது தொடர்பாகவும் புகார்கள் அதிக அளவில் வருகின்றன.
சமூக வலைதளங்களை பெண்கள் கவனத்துடன் கையாளவும் - குமரி எஸ்பி அறிவுரை
கன்னியாகுமரி: பெண்கள் தங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களை பெண்கள் கவனத்துடன் கையாளவும்!
அதனால் பெண்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளும், இளம்பெண்களும் கைப்பேசியை தகவல் தொடர்புக்காக மட்டும் பயன்படுத்தலாம். அதேவேளையில் கைபேசிகளில் முகநூல், வாட்ஸ்ஆப் மூலம் முன்பின் தெரியாத நபர்களிடம் மாணவிகள் நட்பை ஏற்படுத்தி கொள்வது பாதுகாப்பாக இருக்காது.
இதன் மூலம் பெண்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதுடன், தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்க முடியும்’ என்று கூறினார்.