குமரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் குமரி மாவட்டத்தில் உள்ள அணை, மலை ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை நீடித்தது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 6.6 மி.மீ. மழை பதிவாகியது.
திற்பரப்பு அருவியில் வெள்ளம்... சோகத்தோடு திரும்பும் சுற்றுலாப் பயணிகள்! - Thiruparapu falls heavy water fall public banned
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இன்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, அவ்வப்போது மழை பெய்தது. தொடர்ந்து மாவட்டத்தில் சுசீந்திரம், ஆரல்வாய்மொழி, தக்கலை, பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், முள்ளங்கினாவிளை ஆகிய பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்தது. திற்பரப்பு அருவிப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையினால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.மேலும் தொடர் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
TAGGED:
திற்பரப்பு அருவியில் வெள்ளம்