கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்துள்ள பழவிளைப் பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு குடிதண்ணீர், கழிவறை, இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகள் உட்பட அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுப்பதில் அரசு மெத்தனமாக இருந்துவருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் தினகரன் தலைமையில் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அந்த இயக்கத்தின் தலைவர் தினகரன் கூறுகையில், இந்த முகாமில் சுமார் 75 குடும்பங்கள் உள்ளன. ஆனால் இங்கு 54 வீடுகள் மட்டுமே உள்ளன. இதுமட்டுமல்லாமல் முகாமில் போதிய அடிப்படை வசதிகள் கூட இல்லை.
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தினர் திடீர் உள்ளிருப்புப் போராட்டம் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.