கன்னியாகுமரி:தென் தமிழ்நாட்டில் முக்கிய மலர் சந்தைகளில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தை. தோவாளை மலர் சந்தைக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் பூக்களை விற்பனைக்க கொண்டு வருவது வழக்கம். இதைபோன்று இங்குள்ள பூக்கள் வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் அனுப்பபடுகிறது.
கடந்த சில நாள்களாக ஏற்பட்ட பணி பொழிவு மற்றும் மழை காரணமாக வெளி மாநிலங்கள் மாவட்டங்களில் இருந்து பூக்கள் வரத்து குறைந்ததாலும், நாளை முகூர்த்த நாளாகவும் இருப்பதால்- பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்ட மல்லிகை பூவானது 3500 ரூபாய்க்கும், 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி இன்று 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.