தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த காண்ட்ராக்டர் உயிரிழப்பு! - பைக்கிலிருந்து கீழே விழுந்த காண்ட்ராக்டர் உயிரிழப்பு

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த காண்ட்ராக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பைக்கிலிருந்து கீழே விழுந்த  காண்ட்ராக்டர் உயிரிழப்பு
பைக்கிலிருந்து கீழே விழுந்த காண்ட்ராக்டர் உயிரிழப்பு

By

Published : Jun 19, 2021, 9:30 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழபெருவிளை முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (53) காண்ட்ராக்டர். இவர் பார்வதிபுரம் பாலம் கீழ்பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகேயுள்ள கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு மீண்டும் தனது இருசக்கரவாகனத்தை எடுப்பதற்காக ஸ்டாண்டை எடுத்தார்.

பைக்கிலிருந்து கீழே விழுந்த காண்ட்ராக்டர் உயிரிழப்பு
அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின்பக்கம் அடிபட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே ஜார்ஜ் இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details