தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களை ஏமாற்றிய காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்! - காவல் துறைத் தலைமை இயக்குனர் திரிபாதி

கன்னியாகுமரி: பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசியின் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றுவதற்கு காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

பெண்களை ஏமாற்றிய காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
பெண்களை ஏமாற்றிய காசி வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

By

Published : May 28, 2020, 11:38 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி. இவர், சமூக வலைதளம் மூலம் பெண்களை தொடர்பு கொண்டு அவர்களை காதலிப்பது போல் நடித்து, நெருக்கமாக இருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை வைத்து அவர்களை மிரட்டி பணம் சம்பாதித்து வந்தார்.

இதையடுத்து, அவரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், காசி தொடர்பான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றக்கோரி குமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத் பரிந்துரை செய்திருந்தார். இதையேற்ற காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி, காசி தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக காசியின் நண்பர் டைசன் ஜீனோ என்பவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டார். மேலும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த வெளிநாட்டில் இருக்கும் கௌதம் என்பவரை பிடிக்க விமான நிலையங்களுக்கு காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: ‘என்னை தேடி வந்த பெண்களுடன் ஜாலியாக இருந்தேன்’ - காசியின் வாக்குமூலம்

ABOUT THE AUTHOR

...view details