கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் ஒரு தேர்தல் அறிக்கையாகவே உள்ளது. சரியான புள்ளி விவரங்களை வெளியிடாமல் தவறான தகவல்களை பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளனர்.
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளார்கள்.
தமிழகத்தில் ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் பழிவாங்கும் நடவடிக்கை தமிழக அரசு கைவிட வேண்டும்.
மிகப்பெரிய வன்முறையை அரங்கேற்றிய மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ், ஜனநாயகம் பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. பாஜகவையும், மம்தாவையும் தோற்கடிப்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம்.
சிபிஐ அமைப்பை பல மாநிலங்களில் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது. தமிழகத்திலும் சிபிஐ விசாரணை நடத்தியது. ஆனால் வழக்குப்பதிவு செய்யவில்லை", என்றார்.