கன்னியாகுமரி:அழகியமண்டபம் தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிவேகத்தில் வந்த கேரளப்பதிவெண் கொண்ட கார், தக்கலை பகுதியில் வரும்போது கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்று கொண்டிந்த பைக் மற்றும் சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் பைக்கில் இருந்த கணேசன் என்பவர், சொகுசு காரின் பானட் மீது சிக்கி காருடன் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் ஆட்டோவில் இருந்த மணி மற்றும் மாகீன் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.