கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குருந்தேற்றியில் உள்ள புகழ்பெற்ற பகவதியம்மன் கோயிலுக்கு இன்று காலை சந்தேகத்திற்குறிய நபர் ஒருவர் சென்றுள்ளார். அங்கு சென்ற அந்த நபர் கோயிலில் இருந்த பொதுமக்களிடம் இந்தி மொழியில் ஏதோ கேட்டுள்ளார். இதனைப் பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் ஒன்று கூடியுள்ளனர். மக்கள் ஒன்று கூடியதும் அவர் திடீரென வாய் பேச முடியாத ஊமை போல் நடிக்க ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.
மேற்குவங்க இளைஞர் குமரியில் கைது - பயங்கரவாதியா என்ற கோணத்தில் விசாரணை - kanniyakumari
கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், குமரி மாவட்ட வரைபடத்துடன் மேற்குவங்க இளைஞர் ஒருவர் மார்த்தாண்டம் அருகே சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அவரை மடக்கிப்பிடித்த மக்கள் உடனடியாக மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அந்த நபர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று தெரிகிறது. இதன் பின்னர் அந்த நபரின் உடமைகளை பரிசோதித்தபோது நவ்ஷத் அலி(32) என்ற பெயர் குறிப்பிடும் அடையாள அட்டை ஒன்று இருந்தது. அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவரிடம் கடந்த 25-ஆம் தேதி கன்னியாகுமரியில் நடைபெற்ற மாதா அமிர்தானந்தமயி பங்கேற்ற நிகழ்ச்சியின் நோட்டீசுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது குறித்து உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மேற்குவங்க இளைஞர் ஒருவர் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.