தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திக்குறிச்சி மஹாதேவர் ஆலயத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் மீட்பு - திக்குறிச்சி மஹாதேவர் ஆலயம்

கன்னியாகுமரி: ஒரு ஆண்டுக்கு முன்பு திக்குறிச்சி மஹாதேவர் ஆலயத்தில் கொள்ளையடிக்கப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடந்த கேரளாவில் பதுக்கி வைத்திருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பாரம்பரிய மிக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு.

கன்னியாகுமரி
temple statue theft

By

Published : Dec 6, 2019, 4:00 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹாதேவர் ஆலயத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி கோயிலின் கருவறை பூட்டை உடைத்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பாரம்பரிய மிக்க மஹாதேவர் உற்சவ மூர்த்தி ஐம் பொன்சிலை, வெள்ளி மற்றும் செம்பாலான திருமுகம், திருவாச்சி, நந்தி சிலை உள்பட வரலாற்று பொக்கிஷங்கள் மற்றும் காணிக்கை பணம் உட்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த நிலையில் இந்த சிலைகளைக் கண்டுபிடிக்க பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் வைத்துவந்த நிலையில் சிலையைக் கண்டு பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் விஜயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் குமரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட கேரள மாநிலம் திருவனந்தபுரம் பீமா பள்ளி பகுதியில் வசித்து வரும் ஷாணாவாஸ் என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து நடத்திய விசாரணையில் அவரது நண்பரான உசேன் அவரது தோழி அமரவிளைப் பகுதியைச் சேர்ந்த சுமிதா ஆகியோர் குடும்பமாக வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலில் தரிசனம் செய்வது போல் சென்று கோயில் முழுவதும் நோட்டமிட்டு வாகன சோதனையில் சிக்காமல் இருக்க நள்ளிரவு நேரத்தில் சொகுசு காரில் வந்து சிலையை கொள்ளையடித்து வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர்.

கொள்ளையடிக்க பட்ட சிலைகல் மீட்பு

பின்பு, பழைய புராதான பொருட்கள் விற்பனை செய்யும் சதிஷ் பாபுவிற்கு சிவன் மற்றும் மந்திர மூர்த்தி சிலைகளை பேரம் பேசி விற்பனை செய்துள்ளனர். தொடர்ந்து சதிஷ் பாபு இந்த சிலைகளை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது, அவர்களை கைது செய்து கொள்ளை நடந்த திக்குறிச்சி மகாதேவர் கோயிலுக்கு அழைத்துச் சென்று எப்படி கொள்ளை நடந்தது என்று நடித்துக் காட்ட வைத்தனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து சிலைகளைக் கைப்பற்றிய காவல்துறையினர் மூவரையும் சிறையிலடைத்தனர்.

இதையும் படிக்க: வேலூர் மகளிர் குழுவினரின் நெகிழி ஒழிப்பு புரட்சி! - சிறப்புக் கட்டுரை

ABOUT THE AUTHOR

...view details