தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் போக்குவரத்து மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு! - trains

கன்னியாகுமரி: கழக்கூட்டம் மற்றும் கடைக்காவூர் இடையே பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் போக்கவரத்து மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

By

Published : Mar 27, 2019, 3:05 PM IST

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் ஒரு மணி நேரம் 40 நிமிடம் நிறுத்தப்பட்டு பின்னர் இயக்கப்படும். கன்னியாகுமரியில் இருந்து திப்ருகார் வரைஇயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 29ஆம் தேதி கொச்சுவேலி ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்படும்.

இதுபோல், குஜராத்தில் நடைபெறும் ரயில்வே பணிகள் காரணமாக வரும் 28ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது.காந்தி தாமில் இருந்து புறப்படும் இதன் இணைப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணிகள் காரணமாக 28ஆம்தேதி முதல் 31ஆம் தேதி வரை ஒரு சில ரயில்கள் பத்து நிமிடம் முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் வகையில் இயக்கப்படுகின்றன.

ABOUT THE AUTHOR

...view details