தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக இடம்பெறும் கூட்டணியில் மஜக இடம்பெறாது தமிமுன் அன்சாரி திட்டவட்டம்

பாஜக இடம்பெறும் கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Thamimun ansari alliance
பாஜக இடம்பெறும் கூட்டணியில் மஜக இடம்பெறாது தமிமுன் அன்சாரி திட்டவட்டம்

By

Published : Feb 28, 2021, 11:49 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆறாம் ஆண்டு தொடக்க விழா மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பங்களிப்பு குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். பாஜக சமூக நீதிக்கு எதிரான கட்சி என்பதால், அந்தக் கட்சி இடம்பெறும் கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெறாது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை பிகாரில் நடத்தப்பட்ட தேர்தல் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

பாஜக இடம்பெறும் கூட்டணியில் மஜக இடம்பெறாது தமிமுன் அன்சாரி திட்டவட்டம்

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில், தமிழ்நாடு மக்கள் உறுதியாக உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:நாளை இறுதிசெய்யப்படும் திமுக - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடையேயான தேர்தல் ஒப்பந்தம்

ABOUT THE AUTHOR

...view details