சித்திரை மாதத்தின் முதல் நாளை, தமிழர்கள் தமிழ் புத்தாண்டைபாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நாகராஜா கோவில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
சித்திரை திருநாள் - கோயில்களில் சிறப்பு வழிபாடு - கனி காணும் நிகழ்ச்சி
கன்னியாகுமரி: சித்திரை பிறந்ததை முன்னிட்டு கோவில்களில் கனி காணும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சித்திரை பிறப்பின் கோயில்களின் சிறப்பு வழிப்பாடு
அதன்படி நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் நடைபெற்ற கனி காணும் நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். இதில் பக்தர்களுக்கு பாரம்பரிய முறைப்படி காசுகளைக் கை நீட்டமாகவும் காய் கனிகளை பிரசாதமாகவும் வழங்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு முழுவதும் ஐஸ்வர்யம், மண் வளம மற்றும் மழை பெருகும் என்னும் பக்தர்கள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.