தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைக்க விருப்பம்’ - பொன்.ராதாகிருஷ்ணன் - அடல் பிகாரி வாஜ்பாய் நினைவு தினம்

கன்னியாகுமரி: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

pon radhakrishnan
pon radhakrishnan

By

Published : Aug 17, 2020, 4:17 AM IST

Updated : Aug 17, 2020, 5:48 AM IST

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வாஜ்பாயின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கரோனாவுக்கான தடுப்பு மருந்து விரைவில் தயாராகிவிடும் என பிரதமர் கூறியுள்ள நிலையில், உலகத்திலேயே முதன்முதலில் அந்த மருந்தை கண்டுபிடிக்கும் பெருமை இந்தியாவிற்கு கிடைக்கும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: அடல் பிகாரி வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்!

Last Updated : Aug 17, 2020, 5:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details