கன்னியாகுமாரி மாவட்டம், பரப்பாடியில், தமிழன்னை தமிழ்ச் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், விவேகானந்த கேந்திரா இடத்தில் நடைபெற்றது. அதில் தமிழ் அன்னைக்கு சிலை கட்டுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ் அன்னைக்கு 12 அடியில் சிலை வைக்க முயற்சி! - kanyakumari tamil conference
நாகர்கோவில்: பரப்பாடியில் நடைபெற்ற தமிழன்னை என்னும் தமிழ்ச் சங்க பொதுக்கூட்டதில், தமிழ் அன்னைக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்று, தமிழ்அறிஞர்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் கூறும்போது, "கன்னியாகுமரியில் தமிழ் வழி கல்வி தேய்ந்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டும்வகையில் திருநெல்வேலியில் 12 அடியில் தமிழன்னைக்கு சிலை வைத்து கோயில் கட்டப்படவுள்ளது. அங்கு தமிழ் மொழியில் வழிபாட்டுமுறை நடத்துதல், மேலும் கோயில் வளாகத்தில் தமிழ் நூலகம், தமிழ் மருத்துவ மையம் போன்ற சிறப்பு அமசங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். இதனை முன்னிட்டு அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறும். அதற்காக தமிழ் அறிஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்ல இருக்கிறோம்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பத்மநாபன் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.